Monday, February 14, 2011

http://changesdo.blogspot.com/2011/02/blog-post_13.htmlகளம்,பெண்கள்,மாணவர் விருந்து,விமர்சனங்கள் - 16 comments ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி 15ஆம் நாளிதழ்களில் அதற்கு முதல் நாள் (14 பிப்ரவரி) 'காதலர் தினம்' கொண்டாட(?)ப் பட்டதும் அதில் ஏற்பட்ட ரசாபாசங்களும் அவமானங்களும் செய்திகளாக விரிந்திருக்கும். 'நாளைய தினம்' உலகம் முழுதும் கொண்டாடப்படும் இலட்சணம் நாளை மறு நாள் நாளிதழ்களில் வெளியாகும். நபியவர்கள் கூறினார்கள் ”எந்த ஒரு சமூகத்தில் பகிரங்கமாக பாவம் நடக்கிறதோ, அங்கு அதிக (அழிவுகள்) மரணங்கள் நிகழும்” என்று கூறினார்கள்.(தப்றானி) ஒரு முறை நபியவர்கள் கூறினார்கள் ”அல்லாஹ்வின் வேதனை வந்து விட்டால் அது எல்லோரையும் காவு கொள்ளும்” அப்பொழுது எங்கள் மத்தியில் நல்லவர்கள் இருந்தாலுமா? என்று கேட்கப்பட்டது அதற்கவாகள் ”ஆம், அசிங்கங்கள், அழுக்குகள் அதிகமானால்” என்று கூறினார்கள். (புஹாரி சகோதரர்களே! இன்று உலக அளவில் நாளை பெப்ரவரி 14 திங்கக் கிழமை கொண்டாடப் பட இருக்கும் இந்த அசிங்கமான, விபச்சார தினமான காதலர் தினம் எனும் ஒரு தினத்தை, முஸ்லிம்களாகிய நாமும் எதிர் கொள்கின்ற போது, நாம் எவ்வாறு இதிலே நடந்து கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வு நமக்கு மிக அவசியமாகும். உலக அளவில் பச்சைக் கொடி காட்டப் படுகின்ற இவ்விழி செயலினால், நாளை இறைவனின் கோபப் பார்வைக்குள்ளாகி எத்தனை மரணங்கள் நிகழப் போகிறதோ தெரியாது.இதனைப் பார்த்துக் கொண்டு சும்மா இருந்தாலும் அந்த வேதனையிலிருந்து தப்பிக்க எந்த முகாந்திரமும் நமக்குக் கிடையாது . நபியவர்கள் கூரினார்கள்: “நீங்கள் நன்மையை ஏவி தீமையைத் தடுக்காமல் இருந்து, பின்னர் நீங்கள் ஓர் அழிவை சந்தித்திக்கும் போது இறைவனிடம் பிரார்த்தித்தால் அல்லாஹ் அதனை அங்கீகரிக்கமாட்டான். (திர்மிதி) சகோதரர்களே! நான் இந்த அனாச்சாரத்தில் ஈடு பட வில்லை என நினைத்துக் கொண்டு சும்மா இருந்து, பின் அல்லாஹ்வின் வேதனை வந்த பின் கையை உயர்த்தினால் எந்தப் பலனும் கிடையாது. என்பதை ஒவ்வொரு முஸ்லிமும் மனதில் பதித்து வைத்துக் கொள்ள வேண்டும். . உங்களுக்கு குர்ஆனில் உள்ள ஒரு சம்பவம் ஞாபகம் இருக்கும் என நினைக்கிறேன். அல்லாஹ், சனிக் கிழமை மீன் பிடிக்க வேண்டாம் என தடை செய்த நாளில் அக்கட்டளையை மீறி மீன் பிடித்த ஒரு கூட்டத்தை, குரங்கு பன்றிகளாக உறுமாற்றினான். அதிலே தடையை மீறி மீன் பிடித்தது ஒரு கூட்டம். அதை வேண்டாம் என தடுத்தது ஒரு கூட்டம். மீன் பிடித்ததை தடுக்காமல் பார்த்துக் கொண்டும், தடுத்தவர்களை கேலி,கிண்டல் செய்து கொண்டும் இருந்தது மற்றுமொரு கூட்டம். இம்மூன்று சாராரில் அல்லாஹ் தடுத்த கூட்டத்தை மாத்திரம் பாதுகாத்தான். மற்ற இரு கூட்டத்தையும் அழித்து விட்டான். கொஞ்சம் சிந்தியுங்கள்! நாளை அரங்கேர இருக்கும் இவ்விழிக் கலாச்சார தினத்தில், இம்மார்க்கத்திற்கான நம்முடைய பங்களிப்பு மேற்கூறிய மூன்று சாராரில் எந்த சாராரைச் சார்ந்ததாக இருக்கப் போகிறது என்று!. நபியவர்கள் கூறினார்கள் என் சமூகத்தில் சிலர் பனீ இஸ்ரவேலர்கள் கூட புறியாத காரியத்தையெல்லாம் செய்வார்கள். காலில் அணியும் செறுப்பு காலுக்கு எந்தளவு நெருக்கமாக இருக்கிறதோ, அந்தளவு (கண்மூடித் தனமாக) அவர்களைப் பின் பற்றுவார்கள். ஒரு மகன் தன் தாயை பகிரங்கமாக மனம் முடித்துள்ளான் என தெரிய வந்தாலும், அதே போலிருக்க என் சமூகத்தில் (சிலர்) துணிந்து விடுவார்கள்.என்று கூறினார்கள். (ஹாகிம்) மேலும் நபியவர்கள் கூறினார்கள் ”நீங்கள் உங்களுக்கு முன்னிருந்தோரின் வழிமுறைகளை, ஜானுக்கு ஜான், முலத்துக்கு முலம் பின்பற்றுவீர்கள். ஒர் உடும்பு இந்தப் பொந்தில்தான் நுழைந்தது என்றாலும் அதையும் நம்பிவிடுவார்கள். என்று கூறிய போது, ஸஹாபாக்கள், அல்லாஹ்வின் தூதரே! யகூதி நசாராக்களையா சொல்ல வருகிறீர்கள்? என்ற போது, ”வேறு யார்? அவர்கள்தான்” என்றார்கள்.(புஹாரி) கொஞ்சம் சிந்தியுங்கள் உண்ணுவது,பருகுவது,உடுத்துவது,விற்பது,வாங்குவது, எதுவாக இருப்பினும் இந்த யகூதிகளையே முன்னுதாரனமாகக் கொள்கிறோமா இல்லையா? எனவே நாமும் யகூதி நஸாராக்களைப் போன்றவர்களாகி விடுகிறோம் என்பதை மறந்திடாதீர்கள். ”விபச்சாரத்தை நெருங்காதீர்கள்” (இஸ்ரா.32) என்று இரைவன் கூறியதன் பொருள் என்ன தெரியுமா? மெயிலில் பெண்களோடு உறவாடுவது, எஸ,எம்.எஸ அணுப்புவது,போனில் பேசுவது, மிஸ்ட்கோள் (அழைப்பு) கொடுப்பது, கிப்ட், வழங்குவது, இதே போன்று என்னவெல்லாம் மறைந்து கொண்டு சமூகத்தைப் பயந்து செய்யப் படுகிறதோ அது அனைத்துமே நீங்கள் விபச்சாரம் செய்யப் போகிறிர்கள் என்பதுதான் அல்லாஹ் கூறிய வசனத்தின் பொருள் எனவே முஸ்லீம்களாகிய எமக்கு, ஜும்ஆ,நோன்பு மற்றும் ஹஜ் ஆகியவையும் மார்க்கம் அணுமதித்த ஏனையவைகளைத் தவிர வேறொன்றும் சந்தோஷமான நாள் கிடையாது என்பதை மனதில் இருத்தி, அல்லாஹவும் அவன் தூதரும் காட்டிய பாதையில் செல்வோமாக. ”நம்பிக்ககை கொண்டோரே! யூத கிறிஸ்தவர்களை உங்கள் பாதுகாவலர்களாக்கிக் கொள்ளாதீர்கள்,அவர்களில் ஒருவர் மற்றவர்களுக்குப் பாதுகாவலர்கள். உங்களில், அவர்களை பொறுப்பாளர்களாக்கிக் கொள்வோர் அவர்களைச் சேர்ந்தவரே. அநீதி இழைத்த கூட்டத்திற்கு அல்லாஹ் வழி காட்ட மாட்டான். (5,51) ”எந்த ஒரு சமூகம் பிற சமூகத்துக்கு ஒப்பாக நடக்கிறதோ, அவர் அந்த சமூகத்தைச் சேர்ந்தவரே. மறுமையில் அவர்களுடன் எழுப்பப் படுவார்”.(ஸஹீஹுல் ஜாமிஃ) எனவே, வீசுகின்ற காற்றுக்கு சேற்றில் நட்டி வைக்கப் பட்ட கம்பைப் போன்றல்லாமல், உறுதியாக நமக்கே உரிய தனித் தன்மையோடு,ஒழுக்க விழுமியங்களோடு வாழ வல்லவன் அல்லாஹ் நம்மனைவரையும் இத்தீமையிலிருந்து காத்தருள்வானாக. U. L. அன்சார், கத்தார்


பெட்ரோல் டீசல் விலைகளை வைத்து அத்தியாவசிய பொருட்களின் விலைகளில் அரசாங்கம் கைவைத்து பூச்சாண்டி காட்டும் நாடகத்திற்கு முற்று புள்ளி வைக்கும் விதமாக இலங்கை வாலிபரான 'துஷார ஹெதிரிசிங்க " சாதனை கண்டுபிடிப்பினை மேற்கொண்டுள்ளார் . ஆம் தண்ணீரில் இயங்க கூடிய காரை வடிவமைத்துள்ளார் இந்த இளைஞர் தமது சோதனை முயற்சியாக 3 லீடர் தண்ணீரை எரிபொருளாக பயன் படுத்தி 300 km பயணம் மேற்கொண்டு சாதனை புரிந்துள்ளார்.தண்ணீரில் இயங்க கூடிய இந்த காரின் மிக முக்கியமான அம்சமாக சுற்று சூழலிற்கு பெரும் ஆபத்தை விளைவிக்கும் புகை இந்த காரில் இல்லை என்பதாகும் . வெளிநாட்டு நிறுவனங்கள் போட்டி போட்டு கொண்டு இவரது தொழிநுட்பத்தை வாங்குவதற்கு முற்சிகளை மேற்கொண்டும் இந்த தொழில்நுட்பத்தை தாய் நாட்டிற்காக சமர்பிக்கும் நோக்கோடு அவர்களின் கோரிக்கைகைளை நிராகரித்ததாக தெரிவிற்கும் துஷாரவிற்கு உள்நாட்டில் இவரை ஊக்குவிக்கவும் இந்த தொழிநுட்பத்தை மேம்படுத்தவும் யாரும் முன்வராதது வேதனையான உண்மையாகும் . இவரது முயற்சி வெற்றி பெறவும் இந்த தொழிநுட்பம் மிக சீக்கிரமாக மக்கள் பாவனைக்கு கிடைத்திடவும் துஷாரவை வாழ்த்திடுவோம் .